இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் – ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வந்த வேகத்தில் வெளியேறியபோதும், அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடினர்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், ரன் ஏதும் எடுக்காமல் 2வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.

அதன் பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டாய்னிஸ் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. தேநீர் இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.