போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ளும் காவல் துறை வாகனங்களில் Number plate recognition வசதிகொண்ட விசேட கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விக்டோரியா மாநிலத்தில் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை ஒரே பார்வையில் ஸ்கான் செய்யப்படும். அதனை iPad app வழியாக காவல் துறைகுத் தகவல் கொடுக்கும் வகையில் இக்கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பதிவு செய்யப்படாத அல்லது திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டவர்களை இலகுவாக கண்டறிய முடியும்.