அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் 2017ஆம் ஆண்டில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்னர் மெல்பர்னில் தாக்குதலை நடத்திய 29 வயது ஜேம்ஸ் கார்கசுலாஸ் (James Gargasoulas) எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 46 ஆண்டுகளுக்கு மறுக்கப்பட்டது.
தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தை ஒன்றும் 10 வயதுச் சிறுமியும் அடங்குவர்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் ஒரேநேரத்தில் பலர் கொல்லப்பட்ட ஆக மோசமான சம்பவங்களில் ஒன்று இதுவென்று அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.