அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் (Scott Morrison), புதிய அமைச்சரவை நியமனம் குறித்து அறிவித்துள்ளார்.
செனட்டர் லிண்ட ரெனால்ட்ஸ் (Linda Reynolds), அவுஸ்திரேலியாவின் புதிய தற்காப்புத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையிலிருந்து சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியானது.
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல் (Liberal) கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன.
மொரிஸ்ஸன் (Morrison) தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அவுஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் பைன் (Christopher Pyne), தற்காப்புத் தொழில்துறை அமைச்சர் ஸ்டீவன் வியௌபொ (Steven Ciobo) இருவரும், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று இன்று அறிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal