அவுஸ்திரேலியமுரசு

இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது. தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 – 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது. மேலும் நான்கு ...

Read More »

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 248/4

பெர்த்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் லாபஸ்சாக்னேயின் சதத்தால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டேவிட் வார்னர் – ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த லாபஸ்சாக்னே நிதானமாக விளையாட ஸ்டீவ் ...

Read More »

திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர்!

அவுஸ்திரேலியாவில் இளைஞருக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். சிட்னியை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் நேற்று காலை தூங்கி எழுந்தார், பின்னர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய லொட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர் ஆக்விட்டீர்கள் என கூறினார்கள். இதை முதலில் நம்பாத இளைஞர் ஓன்லையில் அது குறித்து பார்த்த போது அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பெரிய அளவிலான பரிசு பணம் ...

Read More »

‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ – பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக ...

Read More »

மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ள சிட்னி மக்கள்!

அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி ஒரு மாத பார்வையாளர் விசாவில் நியூசிலாந்தில்…!

மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி,  நியூசிலாந்தில் நடைபெறும் Word Christchurch எழுத்தாளர் விழாவில் பங்கெடுத்திருக்கிறார். ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலிற்காக பரவலாக அறியப்படும் பூச்சானி, ஒரு மாத பார்வையாளர் விசாவில் நியூசிலாந்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “இங்கு என்னை சாலையில் கண்டவர்கள் என்னை வரவேற்றனர்,” என்கிறார் பூச்சானி ஒருவர். “நீங்கள் தான் நான் தொலைக்காட்சியில் கண்டவரா?” எனக் கேட்டார். “இருக்கலாம்,” என்றேன். அவர் எனக்கு நூறு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேறியாக சென்றால் பெரும் சலுகை கிடைக்குமா?

ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் வேலை, ஓட்டுநர் உரிமம், 70,000 டாலர்கள் உதவி, மேலும் பல சலுகைகளை பெறலாம் என போலியாகப் பரப்பப்பட்ட பேஸ்புக் பதிவு 49,000 மேற்பட்டோர்களால் பகிரப்பட்டுள்ளது. “நீங்கள் வட கொரிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் 12 ஆண்டுகள் கடுமையான வேலையை தண்டனையாக பெற நேரிடும், ஈரானிய எல்லையை கடந்தால் காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவீர்கள், ஆப்கான் எல்லையை கடந்தால் நீங்கள் சுடப்படுவீர்கள்….வெனிசுலா எல்லையை கடந்தால் நீங்கள் உளவாளியாக முத்திரைக் குத்தப்படுவீர்கள்…அதுவே ஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் சலுகையை பெறுவீர்கள்,”என அப்போலி பதிவில் ...

Read More »

மேற்கு ஆஸ்திரேலியாவும் கருணைக்கொலைக்கு பச்சைக்கொடி!

விக்டோரிய மாநிலத்துக்கு அடுத்ததாக மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. லேபர் கட்சியின் ஆட்சிக்கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் செனட் அவை நேற்று வியாழக்கிழமை 24-11 என்ற பெரும்பான்மையுடன் கருணைக்கொலைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது.  சமர்ப்பிக்கப்பட்ட சட்டமுன்வடிவின் 184 சரத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 55 திருத்தங்களின் பின்னர் இந்தச்சட்டம் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இதையடுத்து இறுதி அனுமதிக்காக மீண்டும் கீழவைக்கு(House of Representatives) அனுப்பப்படும் இச்சட்டம் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரகாரம், பாரதூரமான நோய்த்தாக்கத்தின் வலியுடன் போராடிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிரோடிருப்பதற்கான மருத்துவ உத்தரவாதம் வழங்கப்பட்ட – ...

Read More »

ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் பாகிஸ்தான் அங்கு 0-2 என்று ஒயிட்வாஷ் டெஸ்ட் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் இந்தியா மட்டுமே ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக விராட் கோலி தலைமை இந்திய அணிக்கே இத்தகைய திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானை அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னின்ங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தங்கள் வெற்றி வாகையை 6-0 என்று உயர்த்தியுள்ளனர். ...

Read More »