இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது.

தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 – 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது.

மேலும் நான்கு போட்டிகளில் இரண்டில் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படும். அதில் இந்தியா விளையாட வேண்டும் என ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, நான்கு போட்டிகள் கொண்ட தொடலில் இரண்டு போட்டிகள் கொண்ட கொஞ்சம் அதிகம் எனத் தெரிவித்திருந்தார்.

ஏறக்குறைய ஆஸ்திரேலியா தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக் கட்டத்தில் இருக்கும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதால் ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானதாக கருதப்படும்.

தற்போது முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலை இருந்தால் பகல்-இரவு டெஸ்ட் சாத்தியமே என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘அடுத்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலிய வரும்போது ஒரு பிங்க்-பால் டெஸ்டில் விளையாடுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அவர்களுக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. தற்போது உள்ள நிலையை பார்க்கும்போது அவர்கள் 2021 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.