Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 50)

அவுஸ்திரேலியமுரசு

காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம்!

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம். இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார். இந்த சூழலில், கொரோனா ...

Read More »

மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்!

சிட்னியில் நடந்த பிக் பாஷ் டி 20 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு ...

Read More »

உயிரிழக்கும் நிலையில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீன தாய்க்கு அவுஸ்திரேலியா அனுமதி!

மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீனாவை சேர்ந்த தாய்க்குஅவுஸ்திரேலிய அரசாங்கம் கொரானாவைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரியில் விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய் மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிற்காக பேராhடிக்கொண்டிருக்கின்ற லி சாங்சியாங் என்ற 22 இளைஞனை பார்ப்பதற்கே இளைஞனின் தாய்க்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. ளைஞனின் தாய் மகனை பார்ப்பதற்காக விண்ணப்பித்த தருணத்திலேயே சீனா பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் தடை ...

Read More »

ஆஸ்திரேலிய நூலகத்திற்கு தடுப்பு முகாம் அகதியின் நூல் நன்கொடை !

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி. பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார். ...

Read More »

சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை!

சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது. இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்!

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் ...

Read More »

தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை ...

Read More »

சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை!

சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நகரிலிருந்து வருபவர்கள் இரு வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு மூத்த மருத்துவ ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எடுக்கப்பட்டது” என்றார். ...

Read More »