காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்படும்!

அவுஸ்திரேலியோ மற்றும் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 33 பேர் உயிரிழந்ததுடன் பல சொத்துக்களும் உயிரினங்களும் தீயில் கருகி நாசமாகின.

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்பத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளார்

அத்தோடு கடந்த ஆண்டு செம்டெம்பர் மாதம் ஆரம்பித்த காட்டுத் தீ பல்வேறு பகுதிகளில் அழிவுளை ஏற்படுத்தியது.

தீயணைப்பு வீரர்களின் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பல ஏக்கர் நிலங்களை தீயில் இருந்து பாதுகாக்க முடிந்ததாக பிரதமர் மொரிசன் தெரிவித்தார்.

எனினும் காட்டுத் தீயின் தாக்கம் எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் பாதுகாப்பு விடயங்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சிட்னியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.