சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வெளிநாட்டினருக்கான தடை உத்தரவினை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி முதலாம் திகதி விதிக்கப்பட்ட இந்த 14 நாட்கள் தடையுத்தரவானது இன்றையதினம் நிறைவடையும் தறுவாயிலேயே, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வியட்நாமில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகையானது 16 ஆக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வைரஸின் பரவலை கட்டுப்படுத்த கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வியட்நாமின் பின் சூயென் மாவட்டத்தில் கம்யூனை சுற்றியுள்ள ஒரு பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் இன்று முதல் அடுத்த 20 நாட்களுக்கு குறித்த பகுதியில் உள்ள 10,000 குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே ஒரு நாடு தனது பகுதியையொன்றை தனிமைப்படுத்தியுள்ளமை இதுவே முதன் முறையாகும்.