அவுஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் நகரை அண்மித்த வீதியொன்றில் திடீரென காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று காலை சுமார் ; 8.00 மணியளவிலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து பேர் காருக்குள் இருந்துள்ள நிலையிலேயே குறித்தக் கார் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் காருக்குள் இருந்த பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் காரை நோக்கி ஓடி சென்று காருக்குள்ளிருந்த குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அதன்போது, அவன் தான் என் மீது மண்ணெண்ணையை ஊற்றினான் என குறித்தப் பெண் கத்தியதாக அப்பெண்ணை மீட்டவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தீ விபத்தில் சிக்கிப் பலியானவர், நியூசிலாந்து வாரியரஸ் ரக்பி அணியின் முன்னாள் வீரரான ரோவன் பாக்ஸ்டர் என அடையாளங்காணப்பட்டுள்ளாார். மேலும், குறித்த விபத்தில் அவருடன் சேர்ந்து அவரின் மூன்று குழந்தைகளும் உடல் கருகி பலியாகியுள்ளதுடன், பலத்த தீக்காயங்களுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.
மேலும், இது கொலையா? அல்லது தற்கொலை முயற்சியா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Eelamurasu Australia Online News Portal

