அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புகையிரதம் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
160 பயணிகளுடன் அதிக வேகத்தில் பயணித்த குறித்த ரயிலானது தண்டவாளத்தில் இருந்து விலகி சில மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal