அவுஸ்திரேலியமுரசு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது: டிம் பெய்ன் சொல்கிறார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை போன்றதாகும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கமிட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகம்படுத்தியது. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒன்பது அணிகள் 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூன் வரை 72 போட்டிகளில் விளையாடும். இதனடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற ...

Read More »

விடுதலைக் கோரிக்கையினை நிராகரித்த ஆஸ்திரேலியா

உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியா எங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கையினை ஆஸ்திரேலிய உள்துறை நிராகரித்துள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக குடிவரவுத் தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை இங்கிலாந்து அரசு விடுவித்திருந்தது. இதே போல், ஆஸ்திரேலிய அரசும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கும் என குடிவரவு வழக்கறிஞர்களும் அகதிகளும் எதிர்ப்பார்த்த நிலையில் அக்கோரிக்கையினை ஆஸ்திரேலியா நிராகரித்திருக்கின்றது. ...

Read More »

கொரோனா பாதிப்பில் ஆஸ்திரேலியா எப்படி இருக்கிறது?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் கொரோனா பாதிப்பில் ஆஸ்திரேலியா எப்படி இருக்கிறது… ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் | #StayHomeSaveLives #Covid19 #CoronaVirus Posted by Vikatan EMagazine on Monday, March 30, 2020

Read More »

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய விதிகளை கடைபிடிக்கும் அவுஸ்ரேலியா!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக முக்கிய இடங்களை மூடுவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை ஏற்படுத்த மக்கள் வீடுகளில் இருக்குமாறும் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கையுடன் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு வயதான பெண் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அம் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடிதம்!

“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்களை சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் முன்வைத்துள்ளனர். குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள தாங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமற்றது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் அறிவுரையிலேயே, தடுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று ...

Read More »

வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்!

அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். கொரோனாவைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தங்களை விடுதலை செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா எந்த தருணத்திலும் எங்கள் சூழலிற்குள் நுழையலாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் இலகுவாக பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளோம்,மோசமாக நோய்வாய்படக்கூடிய நிலையில் உள்ளோம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர்கள் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். அரசாங்கம் எங்களை எங்கள் குடும்பத்தவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சைகளிற்கு புதிய கட்டுப்பாடு!

அவுஸ்திரேலியாவில் அவசியமான சத்திரசிகிச்சைகள் தவிர ஏனைய சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் இதனை அறிவித்துள்ளார் . தனியார் அரச மருத்துவமனைகள் இரண்டும் இந்த உத்தரவை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோசமானதாக நிலைமை மாறி ஆபத்தானதாக மாறக்கூடிய நிலையில் உள்ள 30 நாட்களிற்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிற்கும் 90 நாட்களிற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட ஆனால் அவசர நிலையில் உள்ள நோயாளர்களிற்கும் சத்திரசிகிச்சை செய்யலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். ...

Read More »

கொரோனா வைரஸ் தாக்கம் : அவுஸ்திரேலியாவின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெரும்பாளான பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நாட்டின் சினிமா தியெட்டர்கள், விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் தமது குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே இரவில் 149 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் இதுவரை ஆயிரத்து 886 ...

Read More »

முகத்தில் தும்மிவிடுவேன்…கொரோனாவை வைத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் அழகி

இன்ஸ்டாகிராம் மொடலான அழகிய இளம்பெண் ஒருவரின் கொரோனா தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Karylle Banez என்ற அவுஸ்திரேலிய இன்ஸ்டாகிராம் மொடலும், ப்ளாக்கருமான ஒரு இளம்பெண், Leigh Street Wine Room என்ற உணவகத்துக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் வெயிட்டரான ஒரு பெண் Karylleஐ மரியாதைக்குரிய விதத்தில் நடத்தவில்லையாம். தன்னைப் பார்த்து அவர் கண்களை உருட்டியதால் கோபமடைந்த Karylle, தனது இன்ஸ்டாகிராம் இடுகை ஒன்றில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த இடுகையில், எனக்கு மட்டும் கொரோனா இருந்தால், யார் மீது தும்மியிருப்பேன் தெரியுமா? இங்கிருக்கும் ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் அச்சத்தில்! முகாம் காவலாளிக்கு கொரோனா!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட அகதிகள், இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. உணவு மற்றும் பிற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் இடம் மிக குறுகியதாகவும் பொதுவானதாகவும் இருக்கும் சூழலில், அகதிகளுக்கு பாதுகாப்பற்ற ...

Read More »