அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெரும்பாளான பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நாட்டின் சினிமா தியெட்டர்கள், விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் தமது குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே இரவில் 149 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் இதுவரை ஆயிரத்து 886 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.