இன்ஸ்டாகிராம் மொடலான அழகிய இளம்பெண் ஒருவரின் கொரோனா தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Karylle Banez என்ற அவுஸ்திரேலிய இன்ஸ்டாகிராம் மொடலும், ப்ளாக்கருமான ஒரு இளம்பெண், Leigh Street Wine Room என்ற உணவகத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியாற்றும் வெயிட்டரான ஒரு பெண் Karylleஐ மரியாதைக்குரிய விதத்தில் நடத்தவில்லையாம். தன்னைப் பார்த்து அவர் கண்களை உருட்டியதால் கோபமடைந்த Karylle, தனது இன்ஸ்டாகிராம் இடுகை ஒன்றில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த இடுகையில், எனக்கு மட்டும் கொரோனா இருந்தால், யார் மீது தும்மியிருப்பேன் தெரியுமா? இங்கிருக்கும் இந்த மரியாதை தெரியாத இந்த வெயிட்டர் பெண் மீதுதான் என்று குறிப்பிட்டுள்ளார் அவர் அந்த உணவகத்தின் பெயரையும் வெளியிட்டு இப்படி Karylle இடுகை வெளியிட்டதைத் தொடர்ந்து, பலர் அந்த உணவக உரிமையாளரான Sali Sasiக்கு தகவலளித்துள்ளார்கள்.
அதைக் கண்டு அதிர்ந்த Sali Sasi, Karylleயை தொடர்புகொண்டு, கொரோனா குறித்த விடயத்தை அந்த இடுகையிலிருந்து நீக்கிவிடுமாறு கேடுக்கொண்டுள்ளார். ஆனால், Karylle உடனடியாக அதை நீக்கவில்லை.
தனது வெயிட்டர் Karylleயை நடத்திய விதத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட Sali Sasi, ஆனால் கொரோனா குறித்த அந்த இடுகை தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் வேடிக்கைக்காக அதை செய்ததாக Karylle கூற, கொரோனா ஒரு கொலைகார கொள்ளைநோய், அது வேடிக்கை அல்ல என்று Sali Sasi கூற, இதற்கிடையில், Karylleயின் இடுகை மக்கள் பலரையும் கோபப்படுத்தியுள்ளது. அவர்கள் Karylleயின் இடுகைக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.