அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
கொரோனாவைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தங்களை விடுதலை செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா எந்த தருணத்திலும் எங்கள் சூழலிற்குள் நுழையலாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் இலகுவாக பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளோம்,மோசமாக நோய்வாய்படக்கூடிய நிலையில் உள்ளோம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர்கள் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் எங்களை எங்கள் குடும்பத்தவர்கள் மத்தியில் விடுதலை செய்த பின்னர் கடுமையாக கண்காணிக்கலாம் என அவுஸ்திரேலிய பிரதமரிற்கான கடிதத்தில் ; தடுத்துவைக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்புமுகாமில் பெருமளவானவர்கள் காணப்படுவால் எங்களால் சமூக விலக்கள் நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லை என விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
முகாமின் பணியாளர்கள் பாதுகாப்புகவசங்களை அணிவதில்லைஎன அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal
