அவுஸ்திரேலியாவில் அவசியமான சத்திரசிகிச்சைகள் தவிர ஏனைய சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் ஸ்கொட் மொறிசன் இதனை அறிவித்துள்ளார் .
தனியார் அரச மருத்துவமனைகள் இரண்டும் இந்த உத்தரவை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசமானதாக நிலைமை மாறி ஆபத்தானதாக மாறக்கூடிய நிலையில் உள்ள 30 நாட்களிற்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிற்கும் 90 நாட்களிற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட ஆனால் அவசர நிலையில் உள்ள நோயாளர்களிற்கும் சத்திரசிகிச்சை செய்யலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை காரணமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்தமுடியும் மருத்துவ வளங்களை அவர்களிற்கு பயன்படுத்த முடியும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.