அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகள்……!

2020- 21 நிதியாண்டின் புலம்பெயர்வு திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்திருக்கிறது. ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்த மாற்றத்தை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கடந்த ஆண்டு திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு 1,08,682 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 79,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலும் வேலைச்செய்ய அனுமதிக்கும் Skilled Independent விசாவுக்கான இடங்கள் 6,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், நிறுவனங்கள் ...

Read More »

ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் குறைந்தன!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக மிகக் குறைவானவர்களிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத் தலைநகர் மெல்பர்னில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேரிடம் மட்டுமே புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அதற்கு முந்திய நாள், இருவரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானவர்களின் 14-நாள் சராசரி விகிதம், 6.2-க்குக் குறைந்துள்ளது. அந்த விகிதம் 5-க்குக் குறைந்தால், சமூக அளவிலான பரவல் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாகப் பொருள்படும். அவ்வாறு நேர்ந்தால், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தேவையான அளவுக்குக் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நாய்களால் வேட்டையாடப்படும் ‘கோலா’ கரடிகள்!

அவுஸ்திரேலியாவின் அடையாளமாகத் திகழும் கோலாக் கரடிகள் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் மாத்திரமே  காணக்கூடிய பாலூட்டி இனமான கோலா கரடிகள்  தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. தற்போது அங்குசுமார் 50,000 கோலா கரடிகளே  வசிக்கின்றன எனக் கூறப்படுகின்றது. யூகலிப்டஸ் மரங்கள் தான் கோலா கரடிகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் உணவு. புதிதாக உருவாக்கப்படும் பண்ணைகளால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன. மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, காட்டத் தீ, கால நிலை மாற்றம், வாழ்விடம் அழிதல் போன்ற காரணங்களால் கோலா ...

Read More »

விக்டோரியாவில் ஒரே ஒரு நோய்த்தொற்றுச் சம்பவம்!

சில மாதங்களாகவே நோய் அதிகமாகப் பரவிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரேயொரு நோய்த்தொற்றுச் சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் விக்டோரியாவின் மெல்பர்ன் நகரில் பதிவாயின.  

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு புதிய தடை!

ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பாரம்பட்சமிக்கது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது சமூகப் பிணைப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு. “விசா கோரி விண்ணப்பிப்பவரும், அவருக்கு ஸ்பான்சர் செய்பவரும் செயல்பாட்டு அளவிலான ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்,” எனக் ...

Read More »

ஆஸ்திரேலிய மக்கள் தொகையை விட அதிகமான பெண்கள் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர்!

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என  ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய ...

Read More »

அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்மாநில பிரதமர் கிளாடிஸ்பெரெஜெக்லியன் சீனாவுடன் தொடர்பை பேணும் அரசியல்வாதியொருவருடன் தனக்கு இரகசிய உறவு உள்ளதாக அறிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி பணம் சம்பாதித்தார் எனகுற்றம்சாட்டப்பட்டுள்ள என்ற அரசியல்வாதியுடன் இரகசிய தனிப்பட்ட உறவுஉள்ளது என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் ஊழல் குறித்த விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். ஊழல் குறித்த நியுசவுத்வேல்ஸ் சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சாட்சியமளித்த பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எனது குடும்பத்தினருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ கூட தெரிவிக்காத ...

Read More »

ஆஸிபிரதமர் வாகனம் மீது போலி இரத்தம்! -பின் கதவால் தப்பிச் சென்ற பிரதமர்

அவுஸ்திரேலியாவில் அகதிகளின் காலவரையறையற்ற தடுப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அமைப்பினர் இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகக்கவசங்களுடன் சென்று அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிரதமரின் கார் உட்பட அவர் சமூகமளித்திருந்த மண்டபம் எனக் கருதப்படும் இடத்திற்கு தக்காளி மற்றும் இரத்தம்போன்று தயாரிக்கப்பட்ட சிவப்புச்சாயத்தையும் எறிந்து சேதம் விளைவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தினால் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை பதற்றம் நிலவியது. பல்கலைக்கழக மண்டபங்கள் இழுத்து மூடப்பட்டன. அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அவரது பாதுகாப்பு ...

Read More »

ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் (அக்.11, 1850)

சிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் இதுதான். இந்த பல்கலைக் கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பெரிய பல்கலைக் கழகங்களுள் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.  

Read More »

அவுஸ்திரேலிய காட்டில் விடப்பட்ட ‘டாஸ்மானியாவின் பேய்’

பாலூட்டி விலங்கினமான டாஸ்மானியாவின் பேய்(Tasmanian devil) 3,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பெருநிலப் பரப்பில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்தப் பெயர் வரக் காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியைக் கொண்டு ...

Read More »