ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக மிகக் குறைவானவர்களிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத் தலைநகர் மெல்பர்னில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேரிடம் மட்டுமே புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
அதற்கு முந்திய நாள், இருவரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானவர்களின் 14-நாள் சராசரி விகிதம், 6.2-க்குக் குறைந்துள்ளது.
அந்த விகிதம் 5-க்குக் குறைந்தால், சமூக அளவிலான பரவல் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாகப் பொருள்படும்.
அவ்வாறு நேர்ந்தால், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தேவையான அளவுக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.