அவுஸ்திரேலியாவின் அடையாளமாகத் திகழும் கோலாக் கரடிகள் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் மாத்திரமே காணக்கூடிய பாலூட்டி இனமான கோலா கரடிகள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன.
தற்போது அங்குசுமார் 50,000 கோலா கரடிகளே வசிக்கின்றன எனக் கூறப்படுகின்றது. யூகலிப்டஸ் மரங்கள் தான் கோலா கரடிகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் உணவு. புதிதாக உருவாக்கப்படும் பண்ணைகளால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன.
மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, காட்டத் தீ, கால நிலை மாற்றம், வாழ்விடம் அழிதல் போன்ற காரணங்களால் கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாகச் சுருங்கி வருகிறது.

இவ்வாண்டு மாத்திரம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 10% கோலா கரடிகள் அழிந்துள்ளன. இதே நிலை நீடித்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் கோலா கரடிகள் அவுஸ்திரேலியாவில் அழிந்து விடும் அபாயமுள்ளது.
குறிப்பாக அங்குள்ள மக்கள் வளர்க்கும் நாய்களாலும் கோலா கரடிகள் வேட்டையாடப்பட்டு அழிகின்றன. இந்த நிலை நீடித்தால் விரைவில் கோலா கரடிகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்” என்று வருத்தத்துடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், அழிந்து வரும் கோலா கரடிகளைக் காப்பாற்றி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் ப்ளூ மவுண்டெயின்ஸ் கோலா ப்ராஜெக்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal