ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் (அக்.11, 1850)

சிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் இதுதான்.

இந்த பல்கலைக் கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பெரிய பல்கலைக் கழகங்களுள் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.