அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்மாநில பிரதமர் கிளாடிஸ்பெரெஜெக்லியன் சீனாவுடன் தொடர்பை பேணும் அரசியல்வாதியொருவருடன் தனக்கு இரகசிய உறவு உள்ளதாக அறிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி பணம் சம்பாதித்தார் எனகுற்றம்சாட்டப்பட்டுள்ள என்ற அரசியல்வாதியுடன் இரகசிய தனிப்பட்ட உறவுஉள்ளது என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் ஊழல் குறித்த விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் குறித்த நியுசவுத்வேல்ஸ் சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சாட்சியமளித்த பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எனது குடும்பத்தினருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ கூட தெரிவிக்காத உறவின் மூலம் நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தவறிழைத்துவிட்டேன் என நியுசவுத்வேல்ஸ்மாநில பிரதமர் கிளாடிஸ்பெரெஜெக்லியன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நான் பொதுவாழ்க்கையில் தவறிழைக்காததன் காரணமாக தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்மீது செல்வாக்கு செலுத்துவதற்கு பலர் முயன்றனர்ஆனால் அவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் நியுசவுத்வேல்ஸ் பிரதமர் வகா வகாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாரில் மக்குவாயர் ஊழலில் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து அதிர்ச்சிக்கப்பால் வெறுப்படைந்துள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்.

2015 முதல் நான் அவருடன் உறவிலிருக்கின்றேன்,ஒரு முறைஅவரை எனது வாழ்க்கையின் முக்கிய நபர் என தெரிவித்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2018 இல் ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளிவந்ததும் அவரை இராஜினாமா செய்யுமாறு கேட்டதாகவும் நியுசவுத்வேல்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் மகுயர் 2020 விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து நான் அவருடனான தொடர்பை துண்டித்தேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.