அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி போடச்சொல்வது சுதந்திரத்தை பறிப்பதாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர். இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. “தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை கடைப்பிடிக்கும் அரசாங்கங்களை நாம் கொண்டிருப்போமே என்றால் இனி நாம் சுதந்திரமாக இருக்க ...

Read More »

ஆஸ்திரேலியா: விசா மோசடியில் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர் ஜாக் தா கூற்றுப்படி, ஆங்கில மொழியை பெரிதும் அறியாத பெருமளவிலான வெளிநாட்டவர்கள் விசா விண்ணப்பங்களை பரிசீலணை செய்யப்படுவதற்காக புலம்பெயர்வு முகவர்களை நம்பியிருக்கின்றனர். ஆஸ்திரேலிய உள்துறையின் கணக்குப்படி, கொரோனா முந்தைய காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 விசா மோசடி குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Read More »

ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா

ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். அவுஸ்திரேலியாவின் எல்லை கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது, ஆனால் ...

Read More »

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா செல்லலாம்!

ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா(விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்) வரலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர், சிங்கப்பூர் பயணிகள் கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டும். இதனடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள், சிட்னி மற்றும் மெல்பனில் இன்று தரையிறங்கியுள்ளன.

Read More »

பிரியா நடேசுக்கு ஆஸ்திரேலிய ஊடகம் கௌரவம்!

ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியா – நடேஸ் தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பற்றிய செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரியாவுக்கு ‘Woman of the Year’ என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையொன்று வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கெதிராக முழுக்குடும்பமும் போராடியது, இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. இந்தப்பின்னணியில், தனது குடும்பத்தின் இருப்புக்காக போராடிய பிரியாவுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, ‘Women ...

Read More »

ஆஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

Read More »

9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர்: ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த அகதி !

இந்த கணத்தை எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. 9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர். ஆனால் எனது நண்பர்கள் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார் ஈரானிய அகதியான ஹமித் கதிமி. “எனக்கு இணைப்பு விசா கிடைத்து விட்டது. ஆனால் எனது சக நண்பர்களுக்கு (அகதிகளுக்கு) விசா கிடைக்கவில்லை. நாங்கள் ஒரே குடும்பம் போல, ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம்… இந்த அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும்.”

Read More »

இழப்பீடு கோரி 10,000 ஆஸி. பிரஜைகள் பதிவு

கொவிட் 19′ தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக 10,000 அவுஸ்திரேலியர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்து நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன. தடுப்பூசியைப் பெற்ற பின்னர், உடல்நலக் கோளாறுகள் இருந்தால், உரிய மருத்துவப் பதிவுகளுடன் புகார் அளிக்கலாம் என்று அவுஸ்திரேலியர்களுக்கு மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பில் மருந்து நிர்வாகத்துக்கு 79,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த 79,000 பேரில் 10,000 ...

Read More »

வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவியில் வாழ்ந்து வரும் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 826,000 பேர் வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவி மூலம் வாழ்க்கையை நடத்தும் நிர்ப்பந்தமான சூழலில் இருப்பதாக சமூகச் சேவைக்கான ஆஸ்திரேலிய கவுன்சிலின் Australian Council of Social Service(ACOSS) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதை இந்த அறிக்கையின் ஆய்வுத் தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 1991 மந்தநிலைக்குப் பின்னர் முந்தைய உச்சமாக 350,000 பேர் வேலையின்றி இருந்திருக்கின்றனர்.ஆனால், தற்போதைய எண்ணிக்கை அதைக்காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

Read More »