இழப்பீடு கோரி 10,000 ஆஸி. பிரஜைகள் பதிவு

கொவிட் 19′ தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக 10,000 அவுஸ்திரேலியர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்து நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன.

தடுப்பூசியைப் பெற்ற பின்னர், உடல்நலக் கோளாறுகள் இருந்தால், உரிய மருத்துவப் பதிவுகளுடன் புகார் அளிக்கலாம் என்று அவுஸ்திரேலியர்களுக்கு மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பில் மருந்து நிர்வாகத்துக்கு 79,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 79,000 பேரில் 10,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.