வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவியில் வாழ்ந்து வரும் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 826,000 பேர் வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவி மூலம் வாழ்க்கையை நடத்தும் நிர்ப்பந்தமான சூழலில் இருப்பதாக சமூகச் சேவைக்கான ஆஸ்திரேலிய கவுன்சிலின் Australian Council of Social Service(ACOSS) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதை இந்த அறிக்கையின் ஆய்வுத் தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 1991 மந்தநிலைக்குப் பின்னர் முந்தைய உச்சமாக 350,000 பேர் வேலையின்றி இருந்திருக்கின்றனர்.ஆனால், தற்போதைய எண்ணிக்கை அதைக்காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.