ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர்.
இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
“தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை கடைப்பிடிக்கும் அரசாங்கங்களை நாம் கொண்டிருப்போமே என்றால் இனி நாம் சுதந்திரமாக இருக்க முடியாது. நாம் சுதந்திரமான சமூகத்தில் வாழவில்லை, சிறைப்படுத்தப்பட்ட முகாமில் வாழ்கிறோம்,” என இப்பேரணியில் ஒருங்கிணைந்த ஆஸ்திரேலிய கட்சியின் தலைவரும் முன்னாள் தாராளவாத கட்சியின் அரசியல்வாதியுமான க்ரைக் கெல்லி பேசியிருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal