ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியா – நடேஸ் தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பற்றிய செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரியாவுக்கு ‘Woman of the Year’ என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையொன்று வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கெதிராக முழுக்குடும்பமும் போராடியது, இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.