ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது.
இதன் மூலம், இந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.