Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 20)

அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார். ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117 என்ற வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் புதிய முடக்கலை அறிவித்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 179 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம் முன்னர் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய ...

Read More »

சிட்னி டெஸ்ட்: ரஹானேவுக்கு மீண்டும் புதிர் தகவல் அனுப்பிய வாசிம் ஜாபர்

சிட்னி டெஸ்டில் பேட்டிங் ஆர்டரை இந்த வரிசையில் தேர்வு செய்யுங்கள் என்று ரஹானேவுக்கு புதிர் மெஸேஜ் அனுப்பியுள்ளார் வாசிம் ஜாபர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்திகதி நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. ஷுப்மன் கில் அறிமுக போட்டிகள் நம்பிக்கையூட்டும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்த ...

Read More »

விக்டோரியாவில் மீண்டும் கொரோனா நோயாளர்கள்

இரண்டு மாத இடைவெளியின் பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விக்டோரியா அரசாஙகம் தெரிவித்துள்ளது. மெல்பேர்னின் புறநகர் பகுதியை சேர்ந்;த ஒருவரும், ஹலாமிலிருந்து ஒருவரும் மிச்சாமிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கொரோனா எவ்வாறு பரவியது என்பதனை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன ...

Read More »

சிட்னியில் கொரோனா பரவல் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு

சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கனடா செல்ல முடியாத நிலை…!

ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. “ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் சித்ரவதைக்கு உள்ளாகும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar. ஆப்கானிஸ்தானின் ...

Read More »

விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் ...

Read More »

2021 ஒக்டோபருக்குள் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும்-அவுஸ்திரேலியா

அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆற்றில் மூழ்கிப் பலி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது. நத்தார்  தினத்தன்று தனது நண்பர்களுடன் ...

Read More »