ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனிமுகநூலில் வெளியாகும் என அதன் அவுஸ்ரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே தனது நிலையில் இருந்து இறங்கி வந்து, ஊடக செய்திகளுக்கு பணம் வழங்க தயார் என தெரிவித்துள்ளது.
இப்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, முகநூலில் கூகுளும் தங்களது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.