ஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதை ஆஸ்திரேலியா செனட் சபை உட்படுத்த இருக்கிறது.
இந்த விசாரணையில், இவ்விசா முறையில் ஏற்படும் விசா வழங்க ஏற்படும் தாமதம், பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
“நமது குடும்ப விசா வழங்கும் முறை சீர்குலைந்து கிடக்கிறது. ஆஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட பலரை அது ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார் பசுமைக் கட்சியின் துணைத்தலைவரும் செனட் உறுப்பினருமான Nick McKim.
“பல தசாப்தங்களாக நீளும் காத்திருப்புப் பட்டியல்கள், அதிகப்படியான கட்டணம், சிக்கலான செயல்முறை ஆகியவை பலரை தங்களது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறது,” என அவர் கூறியிருக்கிறார்.
இணையர் விசாவின் கீழ் தங்கள் இணையரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக்கொள்ள விண்ணப்பித்த சுமார் 1 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பல ஆண்டுகளாக காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
“குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களின் சில வகைகளில் 50 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் என்பது அபத்தமானது,” என்கிறார் McKim.