Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 179)

அவுஸ்திரேலியமுரசு

தென் சீனக் கடல் விவகாரம் முறையாக கையாளப்படாவிட்டால் ஆபத்து

சீன தலைநகர் பீஜிங்கில் 7-வது ஜியாங்ஷன் பிராந்திய பாதுகாப்பு மன்ற கூட்டம் இன்று (11) நடைபெற்றது. புதுவகையான சர்வதேச உறவுகளை உருவாக்குவது கூட்டத்தின் மையமான கருத்தாக இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்ரேலிய முன்னாள் பிரதமர், “தென் சீனக் கடல் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அமெரிக்கா-சீனா இடையே சிக்கலாக மாறும். இந்த பிரச்சனைகள் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது” என்றார்.

Read More »

அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்களின் ஆய்வு

‘மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்’ என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பில் வௌிவந்த உண்மை?

கிரிக்கட் பந்து தலையை தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய அணி வீரர்பி லிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நீண்ட விசாரணைகளின் பின்னர் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் மரணம் தொடர்பில் 5 நாள் ஜூரி குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் , இதன் போது பந்து தலையை தாக்கிய நொடி முதல்பி லிப் ஹியூஸின் மரணத்திற்கான செயன்முறை ஆரம்பித்து விட்டதாக தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சிட்னி நகரில் ...

Read More »

புகலிடம் கோருவோர் அறிந்திருக்க வேண்டியவை

தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றிய விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்விhttp://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/trrkaalik-paatukaappu-viicaa-kurrittu-puklittm-kooruvoor-arrintirukk-veennttiyvai?language=ta  

Read More »

அவுஸ்ரேலியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு

புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை கையாள்வது எப்படி? தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்க்கு தமிழ் சட்ட வல்லுனரான அவனிதா செல்வராஜா கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ் ஏதிலிகள் கழகத்தின் குமார் நாராயணசாமியும் பங்குபற்றுகிறார். தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றிய தகவல்களை ...

Read More »

கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதம் அடித்துள்ளார்

நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய ...

Read More »

SBS தேசிய மொழிப் போட்டியில் இரு தமிழ் மாணவர்கள் வெற்றி

SBS வானொலி ஆஸ்திரேலியா முழுவதும் நடத்திய மொழிப் போட்டியில் சுமார் 700 பள்ளிக்கூடங்களிலிருந்து 4 வயது முதல் 18 வயதுவரை என்று மொத்தம் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்கள் ஆறு பேரில் மெல்பன் நகரில் வாழும் வைகா கார்த்திக் மற்றும் கதிர் ஜானகி சக்திவேல் என்று இரு தமிழ் குழந்தைகள் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு நேற்று(8) சிட்னி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் பொதுநலவாய விளையாட்டு

2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது அரச பணம் மற்றும் நன்கொடையாளர்களின் 680 மில்லியன் ரூபாய் பணம் இலங்கை வங்கியின் கொழும்பு பெரு நிறுவன கிளையின் 71199250 என்ற இலக்கத்தில் பொதுநலவாய விளையாட்டு என்ற பெயருடனான கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்தது. ...

Read More »

அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்தவர் பணிநீக்கம்

அவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிட்னி நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த மேலாளருக்கு அலுவலகம் பிரத்யோகமான மடிக்கணிணி ஒன்று வழங்கியிருந்தது. இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபோது அந்த மடிக்கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததும், ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது. அலுவலகத்தில் விதிமுறைகளை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 5 மாத குழந்தையை கொன்ற தாய்: 8 வருடம் சிறை

அவுஸ்ரேலியா நாட்டில் குடிபோதையில் 5 மாத மகனை கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் மெலிசா என்ற 27 வயதான தாயார் ஒருவர் தனது 5 மாத மகனுடன் வசித்து வந்துள்ளார். மெலிசாவிற்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் நாள் ...

Read More »