அவுஸ்திரேலியாவின் அதர்ச தம்பதி- இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி

இந்த தலைமுறை இளைஞர்கள் செய்வதெல்லாம் காதலா என கேள்வி எழுப்பவர்களுக்கு சவுக்கடி தரும் காதல் இது. இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி.

இந்த நூற்றாண்டின் சிறந்த காதலை பதிவு செய்திருக்கிறார் ஒரு பெண். தன் காதலன் இறந்த பிறகு, அவரது விந்தணு மூலம் கருத்தரித்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் TOOWOOMBA பகுதியை சேர்ந்த   ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல்! ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல் எல்லா காதலர்களை போலவும் பல கனவுகளுடன், தங்கள் திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், ஜோசுவா டேவிஸ் எதிர்பாராத விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

கனவுகள் மெய்பட வேண்டும்! ஐலா க்ரேஸ்வெல், தானும் தனது காதலன் டேவிஸ் சேர்ந்த கனவு மெய்பட வேண்டும். நாங்கள் எங்கள் இல்லற வாழ்வில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தோம். அதை நான் நனவாக்கி தீர்வேன் என்ற முனைப்பில் இருந்தார்

டேவிஸ்-ன் விந்தணு! ஏற்கனவே டேவிஸ்-ன் விந்தணு சேமிக்கப்பட்டிருந்தது. அவரது விந்தணு இன்னும் பயன்படுத்தி கருத்தரிக்க சாத்தியம் என்ற ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறது. எனவே, அதன் மூலம் கருத்தரித்து தனக்கனா குடும்பத்தை அமைத்துக் கொள்ள ஐலா முடிவு செய்தார்!

குடும்பத்தார் சம்மதம்! தங்கள் மகன் மூலமாக வாரிசு வரப் போவதால் டேவிஸ்-ன் குடும்பத்தாரும் இதற்கு பூரண சம்மதம் தெரிவித்தனர். ஆனால், ஐலா நீதிமன்றத்தில் ஒப்புதல் வாங்க வேண்டிய சூழல் இருந்தது.

நீதிமன்றம் பச்சைக் கொடி! ஐலாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றமும் பச்சைக் கொடி காண்பித்து ஐலா – டேவிஸ் ஜோடியின் கனவு மெய்பட உதவியுள்ளது. ஐலா, “டேவிஸ்-ன் கனவு மெய்படும் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.

இரண்டு வருட காதல்… டேவிஸ் ஒரு ரக்பி விளையாட்டு வீரர். இவரது அண்ணனும் ரக்பி வீரர் தான். ஐலா – டேவிஸ் இரண்டு வருடமாக தான் காதலித்து வருகின்றனர். நல்ல உறவிற்கு வருடங்கள் தேவையில்லை, அவர்களுக்குள் சேமித்துள்ள காதலும், நினைவுகளும் போதும் என்பதை நிரூபித்துள்ளார் ஐலா.