Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 178)

அவுஸ்திரேலியமுரசு

நாடு திரும்பும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 20,000 டொலர்

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 டொலர்களுக்கு மேல் பணப்பரிசு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. மனுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளரையும் பராமரிப்பதற்கு தலா 300,000 டொலர்கள் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு 20,000 டொலர்கள் கொடுப்பது இலாபகரமானது என அரசு கருதுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக தமது தாய் நாடு ...

Read More »

ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் ...

Read More »

கானமழை 2016 நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. Date: Saturday, Oct 01, 2016, 6:00 pm. Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448

Read More »

தியாகி திலீபனின் நினைவு நாள் – 2016

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்த லெப் .கேணல் திலீபனை நினைவு கூறுவோம். நாள்- செப்ரம்பர்-30  -இடம்- மெல்போன் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் ...

Read More »

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா

பெற்றோரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான புதிய விசா ஒன்று எதிர்வரும் ஜுலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கான தற்காலிக பெற்றோர் விசா ஒன்றே இவ்வாறு அறிமுகப்படுத்தப்ப டவுள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தவர்களுடன் கலந்துரையாடும் செயற்பாடு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். தற்போது அமுலில் உள்ள பெற்றோர் விசாக்களைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டிய அதேநேரம் அதிகளவு பணமும் செலவாகின்றது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம்

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. அப்போது விமானத்தின் இன்ஜின் பிரச்சனை காரணமாக விமான ஓட்டுநர் உடனடியாக பிரிஸ்பேனுக்கு விமானத்தை செலுத்தியுள்ளார். பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பயணிகளின் சீட்டிற்கு அடியில் பயங்கர வெடிசத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் அனைவரும் ...

Read More »

அவுஸ்ரேலியா தொடரில் இருந்து கிறிஸ் மோரிஸ் நீக்கம்

தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் முழங்கால் காயத்தால் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 8 மாதங்களாக முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வருகிற 30-ந்திகதி முதல்வி அவுஸ்ரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் ...

Read More »

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழங்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை Times Higher Education (THE)  வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே University of Oxford-United Kingdom, California Institute of Technology-United States,        Stanford University-United States ஆகிய பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. University of Melbourne: 33 Australian National University: 47 University of Queensland: 60 ...

Read More »

ஐ.நா வில் அவுஸ்ரேலிய அகதிகள் பற்றி பேசப்பட்டது

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் பேணுவது என்பதை அவுஸ்ரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நவுறு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் காணப்படும் நிலமைகள், படகுகளைத் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பிரித்ததானியார்களே அதிகம்

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் அதிகம் வாழ்கிறார்கள் என்ற தரவு ஒன்றை சென்சஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்ததானியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருக்கின்ற அதேநேரம் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது.

Read More »