படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைமுறைபடுத்தப்பட்ட விதிமுறைகளால் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அகதிகளுக்கு இணைப்பு வீசா என்ற பெயரில் வழங்கப்படுகின்ற தற்காலிக வீசாவின் ஊடாக அங்கு தொழில்புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை அவர்களைப் போன்ற அகதிகளுடனேயே பேண வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் இனரீதியாக பாகுபடுத்தப்பட்டு வேறுபடுத்தப்படுகின்றனர். இது மிகப்பெரிய சிக்கலான விடயமாக இருப்பதாக குறித்த ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.