அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலிய தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ‘ஓசன்ஸ்12’ என்ற பெயரில் விளையாடிய ஈழத் தமிழ் இளைஞர்கள் அணி வெற்றியைப் பெற்றுள்ளது. ‘ஓசன்ஸ் 12’ சுதாகர் சேனாதிப்பிள்ளையின் தலைமையில் விளையாடியது. தேசிய மட்டத்திலான போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் அணி அவுஸ்திரேலியாவின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Read More »

இடம் நகர்கின்றது அவுஸ்திரேலியக் கண்டம்

தற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என்பது புவியியலாளர்களின் கருத்து. எனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது. இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியக் கண்டம் தொடர்ந்தும் தனது இடத்தை விட்டு நகர்ந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக் கண்டமானது ஆண்டு தோறும் பல மில்லி மீற்றர்கள் வரை புவியின் மத்திய பகுதியில் இருந்து நகர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓர் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நகர்வை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை கடந்த 22 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு?

இந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றாலும் மக்கள் பணத்தை மாற்ற திண்டாடுகின்றனர். இதேபோன்று அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை ...

Read More »

அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம்

அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என தென் ஆப்பிரிக்கா அணியின் கப்டன் டுபெலிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா  கப்டன் டுபெலிசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளருக்கு நீதி கிடைத்தது!

அவுஸ்ரேலியாவின் தொழிலாளர் நலன்சார் அமைப்பான Fair Work, இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தை வழங்கிய நிறுவனம் ஒன்றிடமிருந்து, சுமார் 8,711 டொலர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. மெல்பேர்ணிலுள்ள Shelly Removals and Storage  என்ற நிறுவனத்தில் கடந்த வருடம் அக்டோபர் முதல் இவ்வருடம் ஜனவரி வரை இலங்கையிலிருந்து வந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பணிபுரிந்துள்ளார். இவர் வாகனத்தில் சென்று தளபாடங்களை ஏற்றி இறக்கும் பணியில் வாரமொன்றுக்கு 50 மணிநேரங்கள் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவருக்கு மணிக்கு 18 டொலர் என்ற கணக்கின்படி 30-38 மணித்தியாலங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ...

Read More »

தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

பலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவின் பின்னடைவு

ஹோபர்ட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்து. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சில சாதனைத்துளிகள். 2 தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள். இதன்மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டானது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த ...

Read More »

விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் பிஜிஆகிய நாடுகளின் பிரஜைகள் அவுஸ்ரேலியாவிற்குள் விசா இல்லாமல் வந்து போவதற்கான உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதாக பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம் இது ஒரு வதந்தி எனவும் அவுஸ்ரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை எனவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Read More »

உலகெங்குமிருந்து டிரம்ப்புக்குக் குவியும் வாழ்த்துகள்-அவுஸ்ரேலியா

அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கு உலகெங்குமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன. வாஷிங்டன் ஆசிய வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று அவுஸ்ரேலியா கூறியுள்ளது. ஆசிய வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றும் கான்பரா விருப்பம் தெரிவித்தது.

Read More »

ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை

அவுஸ்ரேலியக் காவல்துறையினர் , அதிகாரபூர்வமற்ற முறையில் விமானங்களுக்கு ரேடியோ தகவல் தொடர்பு அனுப்பப்பட்டதன் தொடர்பில், விசாரணை நடத்தி வருகின்றனர். Melbourne, Avlon விமான நிலையங்களில் அத்தகைய 15 சம்பவங்கள் பதிவாயின. சென்ற மாதம், விமானப் போக்குவரத்து அதிகாரி என்ற போர்வையில், Virgin Australia நிறுவன விமானத்தின் தகவல் தொடர்பில், ஒருவர் குளறுபடி செய்தார். விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால், அவர் கொடுத்த தகவல் காரணமாக, விமானத்தை மீண்டும் மேலேற்றும்படி ஆயிற்று. அதே நாளில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அந்த நபர், ...

Read More »