ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை

அவுஸ்ரேலியக் காவல்துறையினர் , அதிகாரபூர்வமற்ற முறையில் விமானங்களுக்கு ரேடியோ தகவல் தொடர்பு அனுப்பப்பட்டதன் தொடர்பில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Melbourne, Avlon விமான நிலையங்களில் அத்தகைய 15 சம்பவங்கள் பதிவாயின.

சென்ற மாதம், விமானப் போக்குவரத்து அதிகாரி என்ற போர்வையில், Virgin Australia நிறுவன விமானத்தின் தகவல் தொடர்பில், ஒருவர் குளறுபடி செய்தார்.

விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால், அவர் கொடுத்த தகவல் காரணமாக, விமானத்தை மீண்டும் மேலேற்றும்படி ஆயிற்று.

அதே நாளில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அந்த நபர், தாம் ஒரு இலகு-ரக விமானத்தின் விமானி என்று கூறினார்.  தமது விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ABC செய்தி நிறுவனம், அந்தத் தகவலை வெளியிட்டது. சம்பவங்களில் பாதுகாப்புக்குப் பங்கம் நேரவில்லை என்று அவுஸ்ரேலிய  விமானச்சேவை அமைப்பு கூறியது.