அவுஸ்ரேலியாவின் பின்னடைவு

ஹோபர்ட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்து.

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சில சாதனைத்துளிகள்.

2
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள். இதன்மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டானது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 1999ல் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் ‘டக்-அவுட்’டானார்கள்.

3
தென் ஆப்ரிக்க வீரர் பிளாண்டர் 5 விக்கெட் கைப்பற்றி எதிரணி 100 ரன்களுக்குள் சுருட்டுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராகவும் (5/7), ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் (5/15) என இரண்டு முறை பிளாண்டர் ராசி தென் ஆப்ரிக்க அணிக்கு ஒர்க் அவுட்டாகியுள்ளது.

85
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின், முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவு சொந்தமண்ணில் மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1984ல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பெர்த்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 76 ரன்களுக்கு சுருண்டது.

197
ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் வெறும் 197 பந்துகளை மட்டும் சந்தித்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் குறைந்த பந்துகளை சந்தித்து ஆல் அவுட்டான பட்டியலில், இரண்டாவது மோசனான இடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்தது. இதற்கு முன் கடந்த 1936ல் இதைவிட குறைந்த பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அதற்கு முன் ஆஸ்திரேலிய அணி இதேபோல 7 முறை மோசமான ஸ்கோரை பதிவு செய்தது.