அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை

அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் சிட்னி, மெல்போர்ன், பேர்த் உள்ளிட்ட நகரங்களில் தேசிய தினத்தை மே 8ம் திகதி  அல்லது மார்ச் முதலாம் திகதிக்கு  மாற்றுமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தேசிய தினத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என அறிவித்துள்ளார். பிரித்தானிய  ஆட்சிக் காவலத்தில்  குற்றங்களைச் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த வகையில் 1788 ஜனவரி ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?

அவுஸ்ரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- ரோஜர் பெடரர் இன்று (29) மோதுகிறார்கள், இதில் பீட்சாம்ராஸ் சாதனையை ரபெல் நடால் முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) மற்றும் இரண்டாம் நிலை ...

Read More »

சிட்னியில், புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது. ஒரு கட்டத்தில், தன்னைத் தின்னும் வெறியுடன் அலையும் அந்தப் புலிக்குப் பின்னால் கூட வாத்து நீந்தியபடி வந்தது. புலி தன்னைக் கவனிக்கவில்லை என்றதும் ‘வா வா’ என்பது போலத் தனது இறகுகளைப் படபடவென அடித்தது. சுமார் பத்து நிமிட முயற்சி வெற்றியளிக்காத நிலையில் குளத்தில் இருந்து வெளியேறியது புலி.  

Read More »

அவுஸ்ரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி!

அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.  

Read More »

5 மணி நேரம் போராடி போட்டிக்குள் நுழைந்தார் நடால்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் நடால். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிசின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். முதல் செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டிமிட்ரோ ஆக்ரோஷமான விளையாடினார். இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – மகுடம் யாருக்கு?

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் சந்தித்த 8 ஆட்டங்களில் 6-ல் செரீனாவே வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். அக்கா வீனசை விட தங்கை செரீனா தான் தற்போது வலுவான வீராங்கனையாக திகழ்கிறார். ஆனாலும் 36 ...

Read More »

இந்திய வம்சாவளியினருக்கு அவுஸ்ரேலிய அரசின் மிக உயரிய விருது

அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மூன்று பேருக்கு அந்நாட்டு அரசின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. அவுஸ்ரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றிவரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம்சார்ந்த பிறதுறைகளில் ...

Read More »

வவுனியா உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவில் போராட்டம்!

மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து நான்காவது நாளாக உண்ணா நோன்பிருந்து போராடிவரும் உறவுகளுடன் கைகோர்க்கும் வகையில்நேற்று(26) பெர்த் நகரில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னாள் அமைதி வழி போராட்டம் ஒன்று மேற்கு அவுஸ்ரேலியா தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

Read More »

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: அவுஸ்ரேலிய கப்டன் சுமித் விலகல்

அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்திகதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா?

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது அரை இறுதி போட்டியில் ரபேல் நடால் – டிமிட்ரோவ் மோதுகிறார்கள். கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்- 15-ம் நிலை வீரர் டிமிட்ரோவ் (பெல்ஜியம்) மோதுகிறார்கள். 2009-ம் ஆண்டு சாம்பியனான ...

Read More »