அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் சிட்னி, மெல்போர்ன், பேர்த் உள்ளிட்ட நகரங்களில் தேசிய தினத்தை மே 8ம் திகதி அல்லது மார்ச் முதலாம் திகதிக்கு மாற்றுமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தேசிய தினத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என அறிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சிக் காவலத்தில் குற்றங்களைச் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த வகையில் 1788 ஜனவரி 26ஆம் திகதி பிரித்தானிய கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் அவுஸ்ரேலியாவைச் சென்றடைந்த நாளே அவுஸ்ரேலியாவின் தேசிய தினமாக கொண்டாடப்படுகின்றது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற அவுஸ்ரேலியாவின் பூர்வகுடி மக்களான அபோரிஜினல்களும் நடுநிலை வெள்ளையின மக்களுமே தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.