அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் கைதான இளைஞனுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தொடர்பில் விரைவான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிட்னியில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான திட்ட ஆவணங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு ...

Read More »

அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி! – மக்களுக்கு எச்சரிக்கை

அவுஸ்ரேலியாவில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஸ்ரோபரி பழங்களில் தையல் ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. தையல் ஊசிகளை மறைத்த ஸ்ரோபரி பழங்களைக் கொள்வனவு செய்த 6 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். பொதுமக்கள் உண்ணும் பழங்களுக்குள் தையல் ஊசியை மறைத்து வைத்து மறைமுக தாக்குதல் நடத்தும் மிகவும் மோசமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். இவ்வாறு தையல் ஊசி வைக்கப்பட்ட ஸ்ரோபரிப் பழத்தினை உட்கொண்ட ...

Read More »

அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர்!

அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆணும், 21 வயதான பெண்ணும் உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டு உற்சாகத்தில் மிதந்தனர். சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 ...

Read More »

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியளிப்புகளும் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருகிறது.

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையில் இருந்து தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மெல்பேர்னில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர், அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதில் இலங்கையின் தெங்கு உற்பத்தி ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read More »

தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமி!

அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. ஹாப்பர் நியெல்சன் எனற சிறுமியே இவ்வாறு தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க மறுத்துள்ளார். தேசிய கீதம் நாட்டின் பூர்வீக மக்களை அவமதிக்கின்றது என கருதியதாலேயே அது இசைக்கப்பட்டவேளை நான் எழுந்து நிற்கவில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தேசிய கீதம் வெள்ளையினத்தவர்களை மையமாக கொண்டது சுதேசிய மக்களை முற்றாக புறக்கணிக்கின்றது எனவும் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த கருத்திற்கு வலதுசாரி ...

Read More »

குடும்பத்தையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் 6 நாட்கள் தங்கிய குடும்பத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார். பெர்த்தில் உள்ள வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஐந்து சடலங்களையும் கைப்பற்றிய நிலையில். இறந்தவர்களின் பெயர்கள் மரா (41), பெவர்லி குயின் (73) அலீஸ் (2), பீட்ரிக்ஸ் (2) மற்றும் சரோலேட் (3) என தெரியவந்தது. இந்நிலையில் ஐந்து பேரையும் கொலை செய்ததாக மராவின் கணவர் ஆண்டனி ராபர்ட் (24) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கூர்மையான ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் தற்கொலை!

மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த அகதியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த 2ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின் உயிரிழந்தார். சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah ...

Read More »

விடாமல் தொடர்ந்து சண்டை போட்ட பாம்புகள் !

அவுஸ்திரேலியாவின் Coroy பகுதியில் இரண்டு பாம்புகள் விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் விடாமல் சண்டையிடுகின்றன. Gillian Bradley என்பவர் தன் வீட்டில் இருந்து இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார்.

Read More »

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டனர்!

புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்த 9 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். இவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் இவர்களை விமான நிலையக் குற்றப்புனாய்வுப் பிரிவினரிடம் ...

Read More »