அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி! – மக்களுக்கு எச்சரிக்கை

அவுஸ்ரேலியாவில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஸ்ரோபரி பழங்களில் தையல் ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தையல் ஊசிகளை மறைத்த ஸ்ரோபரி பழங்களைக் கொள்வனவு செய்த 6 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்கள் உண்ணும் பழங்களுக்குள் தையல் ஊசியை மறைத்து வைத்து மறைமுக தாக்குதல் நடத்தும் மிகவும் மோசமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தையல் ஊசி வைக்கப்பட்ட ஸ்ரோபரிப் பழத்தினை உட்கொண்ட ஒருவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களை கொள்வனவு செய்யும் நியூசிலாந்திடம், ஸ்ரோபரி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு அவஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணையினை மேற்கொள்ளுமாறு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சுகாதார அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைமுகமாக மக்களைத் தாக்கும் இச்செயற்பாட்டின் பின்னணி தொடர்பாக  இதுவரை எவ்வித தகவலையும் பொலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.