அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.
ஹாப்பர் நியெல்சன் எனற சிறுமியே இவ்வாறு தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க மறுத்துள்ளார்.
தேசிய கீதம் நாட்டின் பூர்வீக மக்களை அவமதிக்கின்றது என கருதியதாலேயே அது இசைக்கப்பட்டவேளை நான் எழுந்து நிற்கவில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தேசிய கீதம் வெள்ளையினத்தவர்களை மையமாக கொண்டது சுதேசிய மக்களை முற்றாக புறக்கணிக்கின்றது எனவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் இந்த கருத்திற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஒன்பது வயது மாணவியை பாடசாலையிலிருந்து நீக்கவேண்டும் என போலைன் ஹன்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சிறுமி பிழையான திசையில் பயணிக்கின்றாள் பெற்றோரே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal
