அவுஸ்திரேலியமுரசு

விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது – ஹேசில்வுட்

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ...

Read More »

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்!

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா இந்த விடயத்தை நேற்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை விடுக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை “தன்னார்வலர்” திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பாடசாலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர் மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என மாணவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என கடந்த திங்கட்கிழமை (26) அவுஸ்திரேலிய பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Read More »

அவுஸ்திரேலியக் கரையில் செத்து மடிந்த 28 உயிர்கள்!

அஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கரையில் ஒதுங்கிய 28 திமிங்கிலங்கள், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.  இந்தச் சம்பவம் நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரயிறுதியில், நியூசிலந்தின் சிறு தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கியுள்ளன. தனியார் விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர், குரோஜிங்கோலோங் தேசியப் பூங்காவில் (Croajingolong National Park) ஒதுங்கிய 27 பைலட் வகைத் திமிங்கிலங்கள், ஒரு ஹம்ப்பேக் வகைத் திமிங்கிலம் ஆகியவற்றைக் அவதானித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை விமானி, இந்த திமிங்கிலங்ககை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் அயர்ந்து தூங்கிய விமானி!

ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்தபோது விமானி அயர்ந்து தூங்கியதால் விமானம் தரை இறங்காமல் 46 கி.மீ. தூரம் பறந்து சென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் வோர்டெக்ஸ் ஏர் நிறுவனத்தை சேர்ந்த பைப்பர் பிஏ-31 ரக சரக்கு விமானம் டேவான் போர்ட் நகரில் இருந்து கிங் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். ஆட்டோ பைலட் முறையில் விமானம் இயங்கி கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி தன்னையும் அறியாமல் நன்றாக தூங்கி விட்டார். எனவே, விமானம் கிங் தீவில் தரை ...

Read More »

கோலி, பிரித்வி ஷா, புஜாரா சிறப்பான ஆட்டம்!

ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. அதன்படி நேற்று சிட்னியில் ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறைக்கு உதவியாக இராணுவத்தினர்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவசரகால தருணத்தில் மாநில அரசுகள் காவல் துறைக்கு  மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாநில காவல் துறை படைக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிக்கலாம். அதற்கேற்றவாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது, ‘எதேச்சாதிகாரத்தை நோக்கி அவுஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது’ என்று கண்டித்துள்ளது. இதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் ...

Read More »

சிட்னியில் வரலாறு காணாத கனமழை – ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் இன்று காலை முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிட்னி நகரில் உள்ள சுரங்க புகையிரதங்கள் மற்றும் புகையிரதங்கள், மற்றும் , ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேற அறிமுகமாகும் புதிய விசா!

தெற்கு அவுஸ்திரேலிய மாநில அரசு புதிய பிரிவு விசா ஒன்றை பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்தவாரம் முதல் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய entrepreneurs – தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய விசாமுறையின் கீழ் – தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொழில்துறையை ஆரம்பிக்கும் திட்டத்தை மாநில அரசாங்கத்தின் ...

Read More »

அவுஸ்திரேலியா மைதானத்தை கலக்கிய தமிழ் இளைஞர்கள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நேற்று முன்தினம்  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் “டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்” என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் இந்த செய்கையை கேமிராக்கள் ஆர்வத்துடன் படம் பிடித்துள்ளனர். இதன் மூலம் கஜா ...

Read More »