அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்!

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்பவர்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளனர். இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5,415 பேரும், ஆஸ்திரேலிய குடியுரிமை ...

Read More »

ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாடு மேலும் இறுக்கம்!

கொரோனா பரவலையடுத்து எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றிவரும் ஆஸ்திரேலிய அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதிமுதல் வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளிலே வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள்( ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள்) தமது உறவினரையோ குடும்பத்தையோ பார்வையிடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக ஆஸ்திரேலியா வந்தால், அவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியே செல்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும் ...

Read More »

ஈழத்தமிழர் மெல்பனில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது  

Read More »

குயின்ஸ்லாந்தில் 16 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 199 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 199 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 111 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 50 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் ...

Read More »

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்ற இந்திய இளைஞர் நியூசிலாந்தில் திடீர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுவிட்டு நியூசிலாந்தில் வசிந்துவந்த இந்திய நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த சித்தார்த் என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து பிரிஸ்பேனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சித்தார்த், நேபாளத்தை சேர்ந்த சிறிஜனாவை சந்தித்து, இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. அதன்பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு வசித்த சித்தார்த் – சிறிஜனாவுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்துறையில் தனது கல்வியை ஆஸ்திரேலியாவில் நிறைவுசெய்துகொண்டு நியூசிலாந்து சென்ற சித்தார்த், அங்கு ஹோட்டல் ஒன்றில் பதிவுகளை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளுதல், அதிகமாக உண்ணுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மருத்துவ ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மனநல நோயாளிகள் அதிகரிக்கும் நிலையில் குறைவான திறன் வாய்ந்த மனநல ஆலோசகர்களே இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய நிலை ஆஸ்திரேலிய சுகாதார அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் இதனால் வருங்கால தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள், பொருளாதாரமும் பாதிக்கப்படும் ...

Read More »

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது உட்பட 14 கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப்பொருட்கள் உட்பட 14 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதை அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது. இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்செவிட்ச் கூறும்போது, ‘‘இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சியால் கலாச்சார ரீதியான பொருட்களை ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள அகதிகள்

“ஒவ்வொரு நாளும் எனது நிலைமை மோசமாகவே இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறும் சாஹப் உடின் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி நவுருத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 108 அகதிகளில் ஒருவர். அதே போன்று பப்பு நியூ கினியா தீவிலும் 125 அகதிகள் சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அரசால் படகு வழியாக வரும் அகதிகள் தொடர்பான கொள்கையின் கீழ் இத்தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்கள். கடல் வழியாக தஞ்சமடையும் எந்த அகதிகளும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட ...

Read More »

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2013ல் ஆஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயன்ற 23 வயது ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் Reza Berati மனுஸ்தீவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அங்கு நடந்த கலவரத்தின் போது முகாம் பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர் கொலைச் செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த வழக்கில் பாதுகாப்பு ...

Read More »