ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
இதற்கு முன் 1952-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் ஆறு பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் ஆறு பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார்.
தற்போது எம்மா மெக்கியான் ஏழு பதக்கங்கள் பெற்று அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.
எம்மா மெக்கியான் 4×100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4×200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4×100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்