ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்பவர்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளனர்.
இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5,415 பேரும், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்.
கோவிட் பரவல் காரணமாக இதற்கு முந்தைய நிதியாண்டைவிட 30 சதவீதம் குறைவான எண்ணிக்கையானோரே கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைபெற்றுள்ளனர்.
கடந்த 2019 – 2020 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைபெற்ற 204,817 பேரில் 38, 209 பேருடன், இந்தியர்கள் முதலிடத்தில் காணப்பட்டனர்.
இவ்வாறாக கடந்த 5 நிதியாண்டுகளாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுபவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளன.
இதுகுறித்த தரவு கீழே தரப்பட்டுள்ளது.