ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுவிட்டு நியூசிலாந்தில் வசிந்துவந்த இந்திய நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த சித்தார்த் என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து பிரிஸ்பேனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சித்தார்த், நேபாளத்தை சேர்ந்த சிறிஜனாவை சந்தித்து, இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. அதன்பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு வசித்த சித்தார்த் – சிறிஜனாவுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையும் இருக்கிறது.
கடந்த 27 ஆம் திகதி, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது சித்தார்த் மயங்கி விழுந்து அதன் பின்னர் மேற்கொண்ட சிகிச்சைகள் எதுவம் பலனிக்காத நிலையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
மூளையில் ஏற்பட்ட இரத்தக்குழாய் வெடிப்பினால் இந்த மரணம் சம்பவித்தாக சித்தார்த்தின மனைவி தெரிவித்துள்ளார்.
நிரந்தர வதிவிட விசாவுமின்றி குழந்தையோடு நிர்க்கதியாகியுள்ள தனக்கு உதவி செய்யுமாறு சித்தார்த்தின் மனைவி சமூக வலைத்தத்தின் ஊடாக கோரியுள்ளார்.
Readers seeking support can contact Lifeline for 24-7 crisis support on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.