படகு வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்த ஆறு சீனர்கள், மீண்டும் சீனாவுக்கே அவுஸ்ரேலிய அரசு நாடுகடத்தியது. அவுஸ்ரேலியாவின் மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்புக்கு இடையே ஆறு சீனர்களை கொண்ட படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் சாய்பாய் தீவைச் சென்றடைந்தது. இவர்கள் அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐந்து சீனர்கள் மீண்டும் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக பப்பு நியூ கினியாவை சேர்ந்த ஒருவரும், சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குவின்ஸ்லாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 2013 ஆம் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் இதைப் படிங்க!
அவுஸ்திரேலியாவில் EFTPOS, MasterCard, Visa, American Express card என வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தும் போது மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 1 முதல் ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமான மீட்டும் பெரிய நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharges அறவிட முடியாதென கூறப்பட்டிருந்தது. Australian Competition and Consumer Commission (ACCC) ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2017 ...
Read More »பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார். 40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார். சில பொம்மைகளை ...
Read More »புகலிடக் கோரிக்கையாளருக்கு அவுஸ்ரேலிய அரசின் அதிரடி அறிவிப்பு
அவுஸ்ரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலருக்கு கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு உதவியுடன் அவர்கள் சமூகத்தில் வாழும் நடை முறை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதேவேளை “final departure Bridging E Visa” என்று அரசு கூறும் விசா வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று ...
Read More »ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது பெயின்ட்!
சிட்னியிலுள்ள பல ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் பெயின்ட் தெளித்துச் சென்றுள்ளனர். அவுஸ்திரேலியா எனும் கண்டத்தில் ஐரோப்பியர்கள் குடியேற காலடிபதித்த நாளான ஜனவரி 26 எனும் நாளை அவுஸ்திரேலிய தினமாக கொண்டாடக் கூடாது என்று பல குரல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதன் பின்னணியில் இந்த சிலைகளின்மீது பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் “discovered” the territory in 1770” என்று ஜேம்ஸ் குக் அவர்களின் சிலையின் மீது எழுதப்பட்டிருக்கும் வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி ...
Read More »அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 வயது சிறுமி உயிரிழப்பு!
சிட்னி Lalor Park பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அனுமதியில்லாமல் துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக, குறித்த சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (27) இரவு அவசர சேவைப்பிரிவினர் சிறுமியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டபோது, கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்திருந்தார். குறித்த சிறுமி துப்பாக்கியை எடுத்து தன்னைத்தான் சுட்டுக்கொண்டாரா அல்லது தந்தையால் சுடப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் ...
Read More »அவுஸ்ரேலியாவில் துடுப்பாட்ட மட்டையால் சக மாணவர்களைத் தாக்கிய மாணவன்!
கான்பராவிலுள்ள உள்ள அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (Australian National University) வகுப்பறையில் ஒரு துடுப்பாட்ட மட்டை (baseball bat) கொண்டு பல மாணவர்களைத் தாக்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வகுப்பறையில் துடுப்பாட்ட மட்டையுடன் இன்று காலை நுழைந்த அந்த மாணவரை மற்றைய மாணவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக நான்கு மாணவர்களை அவர் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், சிலர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை யாருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லையென கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதல்தாரி 18 வயதான வெள்ளை இனத்தவரென்றும், ...
Read More »குடியுரிமைச் சட்ட மாற்றம்: எதிர்க்கும் அவுஸ்திரேலிய மனித உரிமை
அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவிற்கு, செனற் அவை அங்கீகாரம் வழங்கக்கூடாதென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இந்த சட்டமானது பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. அதனால் அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்திரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றியமைக்கப்படுகிறது. ஒருவர் ...
Read More »அமெரிக்கப் போர்க்கப்பலை தேடும் அவுஸ்ரேலியா!
விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் காணாமற்போன மாலுமிகளைத் தேடி மீட்கும் பணிகளுக்கான தேடல் பகுதி விரிவுபடுத்தப்படுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. தேடல் பகுதி 2.620 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,524 சதுர கிலோமீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேடல் பணிகளில் அவுஸ்ரேலியாவும் சேர்ந்து கொண்டுள்ளது. முக்கிய தேடல் பகுதியில் சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவை தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகியவை அதைச் சுற்றிய பகுதிகளில் தேடல் பணிகளை நடத்தி வருகின்றன. வர்த்தகக் கப்பலுடன் விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் 10 பேர் காணாமற்போயினர், ஐவர் ...
Read More »அவுஸ்ரேலியாவில் மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுப்பு
அவுஸ்ரேலியா பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டென்மார்க் இளவரசர் பிராடெரிக். இவர் பிரிஸ் பேன் நகரில் படகு விடும் விழாவில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு அவர் சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. மது அருந்திவிட்டு இரவு வாகனம் ஓட்டுபவர்களால் அங்கு அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே ...
Read More »