அவுஸ்ரேலியா பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
டென்மார்க் இளவரசர் பிராடெரிக். இவர் பிரிஸ் பேன் நகரில் படகு விடும் விழாவில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு அவர் சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.
மது அருந்திவிட்டு இரவு வாகனம் ஓட்டுபவர்களால் அங்கு அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே குயின்ஸ்லாந்து உள்ளிட்ட சில மாகாணங்களில் மது விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அல்லது வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளிட்டவற்றை காட்ட வேண்டும், அதன் பின்னரே மதுபான விடுதியில் அனுமதிக்கப்படுவர்.
இந்த நிலையில் இளவரசரின் பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதை தொடர்ந்து இளவரசருக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2000-ம் ஆண்டு இளவரசர் பிராடெரிக் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது மதுபான விடுதியில் வைத்து அறிமுகமான மேரி டெனால்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.