படகு வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்த ஆறு சீனர்கள், மீண்டும் சீனாவுக்கே அவுஸ்ரேலிய அரசு நாடுகடத்தியது.
அவுஸ்ரேலியாவின் மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்புக்கு இடையே ஆறு சீனர்களை கொண்ட படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் சாய்பாய் தீவைச் சென்றடைந்தது. இவர்கள் அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐந்து சீனர்கள் மீண்டும் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக பப்பு நியூ கினியாவை சேர்ந்த ஒருவரும், சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குவின்ஸ்லாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை கையாண்டு வரும் அவுஸ்ரேலிய அரசு படகு வழியே வருபவர்களை திருப்பி அனுப்பி வருகிறது. அந்த வகையில் இதுவரை 31 படகுகளில் வந்த 770 க்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
300 பேர் வசிக்கக்கூடிய சாய்பாய் தீவு அவுஸ்ரேலியாவுக்கு சொந்தமானது. இத்தீவுக்கு மிக அருகேயுள்ள ஒரு குட்டி நாடு பப்பு நியூ கினியா. இங்குள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் 2013க்கு முன்பு படகில் வந்த பல்வேறு நாடுகளின் அகதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.